Kanyakumari

News January 2, 2026

குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

image

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

குமரி: மகனின் மனைவி பிரிந்து சென்றதால் தந்தை தற்கொலை

image

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த தொழிலாளி கிரிஷ் குமார் (46). மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் கிரிஷ் குமாரின் தந்தை நந்தகுமார் வயதான காலத்தில் தன்னையும், மகனையும் யார் கவனிப்பார் என்ற வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை நந்தகுமார் அறையில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். கொல்லங்கோடு போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

குமரி: போலீஸ் பெயரில் மோசடி.. மக்களே உஷார்!

image

குமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குமரியில் காவல்துறை அதிகாரிகளின் பெயரையோ (அ) அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியோ, வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக கூறி யாரேனும் மோசடியில் ஈடுபட்டாலோ (அ) தவறாக பயன்படுத்தினாலோ கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீஸ் எஸ்.பி-யின் வாட்சப் எண்ணிற்கு (81222 23319) புகார் அளிக்கலாம்.

News January 2, 2026

குமரி: 14,797 காலியிடங்கள்… APPLY NOW

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.10ம் தேதி நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, டிப்ளமோ, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 146 நிறுவனங்களில் 14,797 காலியிடங்கள் உள்ளது. வேலைதேடுவோர் tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு – 8270865957, 7904715820, 9994605549. SHARE பண்ணுங்க.

News January 2, 2026

குமரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தம்பதி செந்தில் – சந்தியா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளாகிறது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. டிச.31ம் தேதி இரவும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடர்கிறது.

News January 2, 2026

குமரி: சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி பரிதாப பலி

image

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர் மணக்காட்டுவிளை பகுதியில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டூவீலர் சுரேஷ் மீது மோதியது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் G.H-ல் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் G.H-ல் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 1, 2026

குமரி: இனி நம்ப ஊரிலேயே IT வேலை

image

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

News January 1, 2026

குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி

image

மூலச்சல் பகுதி சுதாமணி (55) தனது பேரன் அபின்ராஜூடன் (19) டிச.30.ம் தேதி இரவு அருகில் உள்ள திருமணவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது புறத்தால்விளையை சேர்ந்த தங்கராஜ் (72) ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. தங்கராஜ் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த 3பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்து போனார். தக்கலைபோலீசார் விசாரணை நடத்தினர்

News January 1, 2026

குமரி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

குமரி மாவட்ட மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 1, 2026

குமரி: மது என நினைத்து மருந்து குடித்தவர் பலி!

image

மேல கரும்பாறையைச் சேர்ந்தவர் செல்வின் குமார் (48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் போதையில் மது என நினைத்து களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து போனார். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!