India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது . அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதியான இது, கடந்த 2006 முதல் திமுகவின் வசம் உள்ளது. அதேசமயம், இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள பாஜக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் 1996 தேர்தலில் முதலில் கால்பதித்து இங்குதான். இந்த முறை அதிமுக-பாஜக கைகோர்த்திருக்கும் சூழலில், தவெகவும் களமிறங்குவது வெற்றி யாருக்கு என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால், துண்டத்துவிளை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்க சென்ற கூலி தொழிலாளி ஜஸ்டஸ்குமார் நேற்று முன்தினம் இரவு மாயமானார். இந்நிலையில் நேற்று காலை முதல் குழித்தை தீயணைப்பு துறையினர், அருமனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜஸ்டஸ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரணியல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் கடந்த வாரம் அவரது பைக்கை இரணியல் பிள்ளையார் கோவில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பைக்கை நைசாக திருடி சென்றுள்ளார். மர்ம நபர் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரணியல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் கடந்த வாரம் அவரது பைக்கை இரணியல் பிள்ளையார் கோவில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பைக்கை நைசாக திருடி சென்றுள்ளார். மர்ம நபர் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

குமரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.