India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. இதுதொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மருத்துவமனை, குழந்தைகள் (ம) பெண்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சிலிண்டர் அனுப்புவதில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்றார்.

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து அதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை (ம) விளம்பர குழுவின் தலைவராக குமாரி MP விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இதற்கான அறிவிப்பினை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசியை சேர்ந்தவர் முத்துராஜ் நட்டாலம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற விரக்தியில் முத்துராஜ் பாலசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது நண்பரது வீட்டில் மார்.6 ம் தேதி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து குமரி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

அருமனை அருகே ஜெஸ்டின் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை பார்க்கும் ரெஞ்சித் சில நாட்களாக வேலைக்கு வராததை ஜெஸ்டின் கண்டித்துள்ளார். இதனால் நேற்று முன் தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரெஞ்சித் கடைக்குள் இருந்த வெட்டு கத்தியை எடுத்து ஜெஸ்டினை தலையில் வெட்டி விட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெஸ்டின் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் ரெஞ்சிதை கைது செய்தனர்.

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

IDBI வங்கியில் 200 Assistant manager காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, டிகிரி மற்றும் 2 வருட முன் அனுபவம் உள்ள வயது 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ. 48480 – ரூ.85,920 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 28 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே, விருப்பமுள்ள 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று, நாளை (மார்ச் 13, 14) ஆகிய 2 நாட்களில் மட்டும் படிவங்களை பெற்று மார்ச் 20-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

Sorry, no posts matched your criteria.