India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் கெலன் முரேன். இவர் கன்னியாகுமரியில் நிலம் கிரையம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ். பி. யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இட்டகவேலி பகுதியைச் சேர்ந்தவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி வில்சன்(56). இவர் அருகில் உள்ள வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கச்சென்றார். அப்போது மரத்தில் ஏறும்போது தென்னை ஓலை அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மரத்திலிருந்து வில்சன் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகர்கோவிலில் கியாஸ் நிறுவனம் ஒன்றில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கியாஸ் புக் செய்து வந்தனர். ஆனால் இன்று புக் செய்வதற்கு தொலைபேசியை தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்காததால் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிறுவன பணியாளர்களிடம் கேட்ட போது தங்களாலும் புக் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் கியாஸ் நிறுவனம் ஒன்றில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கியாஸ் புக் செய்து வந்தனர். ஆனால் இன்று புக் செய்வதற்கு தொலைபேசியை தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்காததால் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிறுவன பணியாளர்களிடம் கேட்ட போது தங்களாலும் புக் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

வடசேரியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.10 கோடி வரை மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சில நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகள் என தெரிய வந்ததையடுத்து நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் மீது போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்.10) செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய (மார்ச்.14) சனிக்கிழமை வேலை நாள் ஆகும்.

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.