Kanyakumari

News January 7, 2026

குமரி: குடும்ப தகராறில் கணவர் விபரீத முடிவு…

image

கொல்லங்கோடு அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் நளினாட்சன் நாயர். இவரது மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் ஜன.5 அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு தூங்க சென்ற நளினாட்சன் காலை வெகுநேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது நளினாட்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு.

News January 7, 2026

குமரி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News January 7, 2026

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

image

ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த தம்பதியர் ஐயப்பன், சிவ ஆனந்தி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன்ர். சிவ ஆனந்தி ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்த சிவ ஆனந்தி ஜன.5-ஆம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

குமரி மக்களே ரயில் சேவையில் மாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் 12667/68, 12689/90, 22657/68 ஆகிய மூன்று ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வேயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

குமரியில் நாளை மின் தடை அறிவிப்பு..!

image

தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம் உபமின் நிலையத்தில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளான்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம் (ம) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News January 7, 2026

பள்ளி வாகனம் மீது டெம்போ மோதி விபத்து

image

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பகுதியில் நேற்று மாலை பள்ளி வாகனமும் டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2026

குமரி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

image

குமரி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து அனைத்து சேவைகளையும் பெறலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது நண்பர்களுக்கு Share பண்ணுங்க.

News January 6, 2026

குமரி: தி.மு.க. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேர் திருவிழாவில் பக்தர்களை அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் இன்று (ஜன.6) புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்.

News January 6, 2026

குமரி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

குமரி மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

குமரி: இனி EB ஆபீஸ்க்கு அலைய தேவையில்லை!

image

குமரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் செய்து<<>> “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!