Kanyakumari

News January 9, 2026

குமரி: முன்னாள் எம்.எல்.ஏ வின் பேரன் குண்டாசில் கைது

image

அஞ்சுகிராமம் அருகே தனியார் சொகுசு விடுதியில் பிறந்தநாள் விழா என்ற பெயரில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது தமிழகத்தையே அதிர வைத்தது. இதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த குலசேகரம் பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வின் பேரன் கோகுல் கிருஷ்ணன்(34) உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கோகுலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 9, 2026

குமரி: மாணவி குளிப்பதை படம் பிடிக்க முயன்ற தொழிலதிபர்.!

image

மிடாலம் பகுதி 15 வயது +1 மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். கடந்தமாதம்  மாணவி வீட்டு குளியலறையில் குளிக்கும்போது அப்பகுதி தொழிலதிபர் கில்பர்ட்(49) மறைந்து நின்று செல்போனில் படம் எடுக்க முயலவும் மாணவி செல்போனை பிடுங்கினார்.மாணவி சத்தம் போடவே  கில்பர்ட் தப்பி ஓடினார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நேற்று(ஜன.8) போக்சோ சட்டத்தில்  கில்பர்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்

News January 8, 2026

குமரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக் செய்து<<>> (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 8, 2026

குமரியில் படகு சேவை தற்காலிக நிறுத்தம்

image

கன்னியாகுமரி கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையினை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News January 8, 2026

குமரியில் 16,000 காலியிடங்கள் அறிவிப்பு..! APPLY NOW

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.10ம் தேதி நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8,10,12th, டிப்ளமோ, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 170 நிறுவனங்களில் 16,000 காலியிடங்கள் உள்ளது. வேலை தேடுவோர் <>tnprivatejobs.tn.gov.in <<>>என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு – 8270865957, 7904715820, 9994605549. SHARE பண்ணுங்க.

News January 8, 2026

குமரி: கால்வாயில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

image

குளச்சல் AVM கால்வாயில் நேற்று மாலை துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனை செய்ததில் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிய வந்துள்ளதாக கூறினர்.

News January 8, 2026

பொங்கல் பரிசுத்தொகுப்பு; தாலுகா அளவில் பறக்கும் படை அமைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் இருப்பின் அதனை மாவட்டம் நிர்வாகத்திற்கு தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தாலுகா அளவில் மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களுக்கும் பறக்கும் படை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 8, 2026

முக்கடல் சங்கமத்தில் பொங்கல் விழாவிற்கு அழைப்பு

image

சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி வரும் ஜன.14 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி முக்கடல் மைதானத்தில் ஜன.,15, 16 ஆகிய இரு நாட்கள் மாலை 5.30 முதல் 8.30 மணி வரை பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள கலெகடர் அழைப்பு விடுத்துள்ளார்.

News January 8, 2026

குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை <>கிளிக்<<>> செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 8, 2026

குமரி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் வலைவீச்சு…!

image

நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் எட்டாமடையில் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரிடம் வேர்கிளம்பியை சேர்ந்த பிரகாஷ் சிங் பணம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்பதற்காக பேரின்பராஜ் சுவாமியார் மடம் சென்ற போது அங்கு முளவிளையை சேர்ந்த 4 பேர் பைக்கில் வந்து பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!