India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, EMI-ல பைக், கார் வாங்கியவர்களா நீங்கள்? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத நீங்க மாற்றவில்லை என்றால் உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருப்பதாகவே காட்டும். அத மாற்ற…
1. இங்கு<
2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.
3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.
SHARE பண்ணுங்க.

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பறக்கையை சேர்ந்தவர் சரவணன் (44). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி லட்சுமி பிரிந்து சென்று விட்டார். இதனால், சரவணன் அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்ட மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குமரியில் 2 நாட்கள் சிறப்புமுகாம் நடந்தது. நேற்று 1914 வாக்குச்சாவடிகளில் நடந்த முகாமில் பெயர் சேர்க்க நாகர்கோவில் தொகுதியில்- 1121, குளச்சல் 1452, பத்மநாபபுரம் 1265 , விளவங்கோடு 1077 கிள்ளியூர் 1397, கன்னியாகுமரி – 1396 என 7708 பேர் படிவம் கொடுத்தனர். 2 நாட்கள் நடந்த முகாமில் மொத்தமாக 12,842 பேர் விண்ணப்பித்தனர்.

மார்த்தாண்டத்தை சேர்ந்த செல்லத்துரை (73) என்பவருடைய வீட்டில் 40 பவுன் தங்கம், ரூ.30,000 பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதில் 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வேலை பார்த்த பிரேமா (46) என்ற பெண்ணை போலீசார் விசாரணை செய்தனர். இதில், செல்லத்துரை வீட்டின் பீரோவை சரிவர மூடவில்லை என்பதும், அதனை கவனித்த பிரேமா, 40 பவுன் நகையை திருடிவிட்டு வேலையை விட்டு நின்றது தெரியவந்தது.

குமரி மாவட்ட மக்களே, பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள 514 ஆபிசர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகின. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.5க்குள் (இன்று) <

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 11 அரசு கல்லூரிகள் 17 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் என்று மொத்தம் 28 கல்லூரிகளைச் சேர்ந்த 2,300 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இன்று மாலை நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 672 பேருக்கு இலவச லேப்டாப் களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகிக்கிறார்.

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31.ம் தேதி ரூ.4,32,94,260, ஜனவரி 1.ம் தேதி ரூ4,08,2640, ஜனவரி3.ம் தேதி ரூ.3,22,16,650 என மொத்தம் ரூ11 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 550க்கு மதுபானங்கள் குமரியில் விற்பனையாகி உள்ளது. பீர் வகைகளை விட மதுபான வகைகளே அதிகம் விற்பனையானது எனவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வன அதிகாரி செல்லத்துரை. இவரது வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ30,500 திருடப்பட்டது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து அவரது வீட்டில் வேலை செய்த மாங்கரையைச் சேர்ந்த பிரேமா 3 மாதத்திற்கு முன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இவரை அழைத்து விசாரித்த போது அவர் திருடியதை ஒப்பு கொண்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.