India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை ஆசீர்வாதமாக கருதுவதாக மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார். இன்றைய தினத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை மிகப்பெரும் ஆசீர்வாதமாக நினைப்பதாகவும் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிறு, குறு நிறுவனங்களுக்கான முத்ரா கடன் உதவி ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்; கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கைக்காக ஒட்டுமொத்த நாடும் காத்திருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், பாஜக மீதான நம்பிக்கையால் தேர்தல் அறிக்கையை தயாரிக்க லட்சக்கணக்கான மக்கள் ஆலோசனைகள் முன்வைத்ததாகவும், ஒட்டுமொத்த நாடும் அறிக்கைக்காக காத்திருந்ததாகவும், ஏனெனில் தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பதை பாஜக நிச்சயம் நிறைவேற்றுமென நாட்டுக்கே தெரியும் என்றார்.
மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘சச்சின்’ படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் நடித்திருந்த இப்படம், ஃபீல் குட் திரைப்படமாக இருந்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் இன்றும் பலரின் ஃபிளேலிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இப்படம் நல்ல வசூலை தராவிட்டாலும், விஜய் நடித்த நல்ல படங்களில் சச்சினுக்கு தனி இடம் உண்டு.
பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடே எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் களத்தில் உத்தரவாதமாக அமல்படுத்தியுள்ளதாகக் கூறினார். நாட்டின் தூண்களான பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும். வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் உத்தரவாதம், 24 காரட் தங்கத்துக்கு சமம் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபிறகு பேசிய அவர், இன்றைய இந்திய அரசியலில், மோடியின் உத்தரவாதமானது, 24 காரட் தங்கம் போல மிக தூய்மை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றார். உலக அரசியல் கட்சிகளில், பாஜக தேர்தல் அறிக்கைதான் சுத்தமான தங்கம் என்றும் அவர் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை 27 பேர் குழு தயாரித்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் செயல்பட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மற்றொரு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். நாட்டு மக்கள் கருத்துகளை கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டு பழங்குடியின பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.