News May 1, 2024
தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை

தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதனைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
Whatsapp யூசர்களுக்கு Alert.. இதை செக் பண்ணுங்க..

உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ➤திடீரென லாக் அவுட் ஆனால் ➤நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தால் ➤Linked Devices-ல் அறிமுகமில்லாத LogIn-கள் ➤புதிய குரூப்கள் மற்றும் Contact-கள் இடம்பெற்றிருந்தால் உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளது. உடனே <<17288605>>இதை<<>> செய்து சரி செய்யுங்கள். அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க, SHARE THIS.
News December 8, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது ஜாக்பாட்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், புதிய உணவு தானிய விநியோக விகிதம் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த உணவு தானியங்களின் அளவு (35kg) மாறவில்லை. கோதுமையின் அளவு அதிகரிக்கப்பட்டு, அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், PHH அட்டைதாரர்களுக்கு 1kg-க்கு பதில் 2kg கோதுமை, 4kg-க்கு பதில் 3kg அரிசி வழங்கப்படும்.
News December 8, 2025
IUML தவெகவில் இணைய திட்டமா?

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலுக்கு 5 சீட்கள் கேட்டிருக்கிறது. ஆனால் ஆளும் தரப்பு, கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள்தான் ஒதுக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம். ஒருவேளை கேட்பதை கொடுக்காத பட்சத்தில் IUML தவெகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான Official தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


