News May 1, 2024
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்

ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ₹2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் வசூலானதை விட 12.4% அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டியாக ₹43,846 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ₹53,538 கோடியும் வசூலாகியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பாக 13.4% வரையும், இறக்குமதிகளில் 8.3% வரையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
News December 15, 2025
IND vs SA: அக்சர் படேல் அணியில் இருந்து விடுவிப்பு

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், SA-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து அக்சர் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷெபாஷ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 2 போட்டிகளிலும், SA ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியிருக்கும் 2 போட்டிகள் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.


