News May 1, 2024
இந்தியா வசமாகுமா இலங்கையின் துறைமுகம்?

வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நிதியுதவி உடன் புதுப்பிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மொத்தம் ₹510 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்த இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News December 16, 2025
நெல்லை கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
News December 16, 2025
இன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்!

தளபதி கச்சேரி பாடலுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்றி விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2-வது பாடல் ரிலீஸ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 நாள்களில் இசை வெளியீடு விழா, டிரெய்லர் ரிலீஸ், படக்குழுவினரின் நேர்காணல் என அடுத்தடுத்து அப்டேட் வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.


