India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால், இருநாடுகளுக்கும் இடையே முழு அளவில் போர் வெடிக்கும். அப்படி போர் மூண்டால், ஈரானையும், இஸ்ரேலையும் எந்தெந்த நாடுகள் ஆதரிக்கும் என்பதை காணலாம். ஈரானின் நெருங்கிய நட்பு நாடு சிரியா. அந்நாட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதனால் ஈரானுக்கு ஆதரவாக சிரியா போரில் குதிக்கும்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவு அமைப்பாகும். இதனால் லெபனானில் இருந்து அந்த அமைப்பு ஏற்கெனவே தாக்குதலை தொடங்கி விட்டது. ஈராக்கில் ஷியா முஸ்லிம் ஆதரவு அரசு உள்ளது. அந்த அரசுக்கு ஈரான் மறைமுகமாக உதவி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஈராக்கும் இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் குதிக்க வாய்ப்புள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரும் தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடும்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ட்ரோன்கள், ஏவுகணைகளை அளித்து ஆரம்பம் முதல் ஈரான் உதவி செய்து ஆதரவு அளிக்கிறது. இதனால் ரஷ்யா, ஈரானுக்கு உறுதுணையாக கடைசியாக இறங்கும் என நம்பப்படுகிறது. ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை வீசக்கூடும். வடகொரியாவும், ஈரானுக்கு ஆயுதங்களை அளித்து உதவ வாய்ப்புள்ளது.
இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்காமல் ஆரம்பம் முதலே அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகள் நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கும். இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகள் அளித்தும் உதவி செய்யும். ஈரான், இஸ்ரேலுடன் இந்தியா நட்புறவு வைத்திருப்பதால், நடுநிலை வகிக்கும்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் பங்களாவுக்கு வெளியே காலை 5 மணிக்கு வந்த 2 பேர், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் 2 பேரும் தப்பியோடி விட்டனர். ஏற்கெனவே சல்மான் கான், அவரின் தந்தைக்கு எதிராக மிரட்டல் உள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு போரை உலகம் தாங்காது என்று ஐநா பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீது ஈரான் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியிருப்பதை தாம் கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்துவதாகவும், இன்னொரு போரை அப்பிராந்தியமோ, உலகமோ தாங்காது என்றும் கூறியுள்ளார்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர், மணிப்பூராகி விடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் விவசாய, கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும் உறுதியளித்த அவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் எனத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் கடன் உயர்ந்தது தான், பிரதமர் மோடியின் சாதனை எனவும் விமர்சித்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசிய நிலையில், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும், இங்கிலாந்தும் களத்தில் குதித்துள்ளன. அமெரிக்கா, தனது பாதுகாப்பு சாதனங்கள் மூலம் ஏராளமான ஈரான் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளது. விமானந்தாங்கி போர் கப்பலையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது. இங்கிலாந்து நாடு தனது விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானங்களை கூடுதலாக மத்திய கிழக்கில் குவித்துள்ளது.
+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இப்பணியில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுற்றதால், மாணவர்களின் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நாளை தொடங்க உள்ளது. திட்டமிட்டப்படி மே.6ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.
தயிரில் வைட்டமின் பி2, பி12, பொட்டாசியம், கால்ஷியம் சத்துக்கள் உள்ளன. மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால் மீன் சாப்பிடுகையில் தயிரை எடுத்து கொள்வது செரிமானத்தை மந்தமடைய செய்யும். இதனால் வயிறு பிரச்னைகள், தோல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆதலால் மறந்தும் மீன் சாப்பிடுகையில் தயிரை எடுக்காதீர்கள்.
Sorry, no posts matched your criteria.