News May 1, 2024
1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை

1 கோடி முறை ‘கோவிந்த கோடி’ எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுதத் தொடங்கியதாக தெரிவித்த அவர், சிறுவயது முதலே ஏழுமலையானை இருவேளையும் வழிபடுவதாகக் கூறினார். ஆன்மிகத்தை வளர்க்க ‘கோவிந்த கோடி’ திட்டத்தை திருமலை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 1 கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்களுக்கு விஐபி தரிசன சலுகை அளிக்கப்படுகிறது.
Similar News
News December 11, 2025
BREAKING: இந்திய அணி பவுலிங்

நியூ சண்டிகரில் நடைபெறும் 2-வது டி20-ல் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் 11-ல் மாற்றம் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா அணியில் ஸ்டப்ஸ், மகராஜ், நார்ஜேவுக்கு பதிலாக ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, பார்ட்மேன் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டி20-ல் 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இந்த போட்டியிலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.
News December 11, 2025
தவெகவுக்கு பாமக அழைப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி, டிச.17-ல் அன்புமணி தலைமையில் பாமக போராட்டம் நடத்தவுள்ளது. இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழக்கறிஞர் பாலு வழங்கினார். இதில் கலந்துகொள்வது பற்றி தலைவருடன் (விஜய்) ஆலோசித்த பின்பு தெரிவிக்கப்படும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
News December 11, 2025
USA வழியில் மெக்சிகோ: இந்திய பொருள்கள் மீது 50% வரி

இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே USA 50% வரி விதித்துள்ளது. இந்நிலையில், மெக்சிகோவும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது 50% வரை வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. 2026 முழுவதும் இந்த வரி அமலில் இருக்கும். இதனால் இந்திய ஜவுளி, ஆட்டோ உதிரி பாகங்கள், பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அமெரிக்காவின் அழுத்தத்தால் தான் மெக்சிகோ இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


