news

News April 13, 2024

அதிமுகவுக்கு அசாதுதீன் ஓவைசி கட்சி ஆதரவு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி அறிவித்துள்ளது. ஓவைசி தனது X பக்கத்தில், “மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு AIMIM ஆதரவளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்” என பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம், தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது ஓவைசி கட்சியும் இணைந்துள்ளது.

News April 13, 2024

இது மட்டும்தான் பாஜக கொடுத்தது

image

மோடி தலைமையிலான ஆட்சியில் ஐஐடி மாணவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தராகண்டில் பிரசாரம் செய்த அவர், பாஜக ஆட்சி வேலையில்லா திண்டாட்டத்தை மட்டுமே நாட்டிற்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, துறைமுகங்கள் என அனைத்தையும் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு, 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸை குறை கூறுவதாக தெரிவித்தார்.

News April 13, 2024

பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள்

image

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் காற்றுடன் கலந்துபோவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு காணாமல் போவது யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுகவுக்கு பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

News April 13, 2024

மின் உற்பத்தி தொடர்பாக மத்திய அரசு உத்தரவு

image

இந்தியாவில் வெயில் காரணமாக மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை மே 1 – ஜூன் 30ஆம் தேதி வரை கட்டாயம் இயக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் இருந்தது. இந்த கோடைகாலத்தில் இந்தியாவின் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகாவாட்டாக இருக்கும் என அரசு கணித்துள்ளது.

News April 13, 2024

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.42 லட்சம் பரிசு!

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு பரிசுத்தொகையை முதல் அமைப்பாக உலக தடகள சம்மேளனம் அறிமுகம் செய்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆக.11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், 48 விதமான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் தங்கம் வெல்லும் தடகள வீரருக்கு பதக்கத்துடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41.80 லட்சம்) பரிசாக வழங்கப்படும்.

News April 13, 2024

கச்சத்தீவு பிரச்னைக்கு பலாப்பழமே தீர்வு!

image

கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண பலாப்பழம் சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், குடிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னைக்கு ஓபிஎஸ்ஸால் மட்டுமே தீர்வு காண முடியும். மோடியுடன் எந்த நேரத்திலும் பேசக்கூடிய ஓபிஎஸ்ஸை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

News April 13, 2024

உணவு வழங்கல் துறையில் விண்ணப்பிக்கலாம்

image

PM கரீப் கல்யாண் திட்டத்தில், தகுதியற்ற பலரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்ததால் மீண்டும் அவர்கள் பெயரை சேர்க்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ரேஷன் கார்டில் உங்கள் பெயரை சேர்க்க, உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News April 13, 2024

200 இடங்களில் கூட வெற்றிபெறாது

image

பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும் என பிரதமர் மோடி கூறிவரும் நிலையில், 200 தொகுதிகளில் கூட வெற்றிபெறாது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற தேர்த பரப்புரையில் பேசிய அவர், மோடியின் உத்தரவாதத்திற்கு இறையாகாதீர்கள். அவை தேர்தலுக்காக கூறப்படும் வெற்று வாக்குறுதிகள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தையே பாஜக அழித்துவிட்டது என விமர்சித்துள்ளார்.

News April 13, 2024

மேக்ஸ்வெல்லை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

image

RCB வீரர் மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல்லில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 3 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார். இவர் மோசமாக விளையாடி வருவதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலே உள்ள படத்தை பார்த்தால் மேக்ஸ்வெல்லை எப்படியெல்லாம் கிண்டல் செய்துள்ளார்கள் என்பது உங்களுக்கே புரியும்.

News April 13, 2024

அதிமுகவினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்பு

image

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. தமிழக உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் மீது புகார் தெரிவித்து அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எழுதியுள்ள கடிதத்தில், “உளவுத்துறையின் நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது. கருத்துரிமை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!