news

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல்; பாஜக ஆதாயம்…TMC எம்பி அட்டாக்

image

பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஊடகங்களில் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதங்களுக்கு பதிலாக, பாஜக ஆதாயம் அடையும்படியான செய்திகள் வெளியாகின்றன சாடியுள்ளார்.

News April 27, 2025

BREAKING: செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

image

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரத்துறை சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி வசமிருந்த வனத்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

இடம் பெயரும் கேது.. 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

image

கேது பகவான், சிம்ம ராசிக்குள் நுழைவதால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 1)மேஷம்: பணியிடத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வியாபாரிகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். 2) கும்பம்: சில பணிகளில் தாமதம் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக செலவுகள் அதிகரிக்கலாம். 3) சிம்மம்: தனிப்பட்ட, தொழில் வாழ்க்கையில் பிரச்னை அதிகரிக்கும். மன ஆரோக்கியம் ஏற்ற இறக்கமாக இருக்குமாம்.

News April 27, 2025

குடும்பநல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறை

image

தமிழகம் முழுவதும் உள்ள குடும்பநல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் சார்பில் கோடை விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி, மே 1 முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள குடும்பநல கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை பகிருங்க.

News April 27, 2025

பாகிஸ்தானை 4-ஆக உடைக்க வேண்டும்: சு.சுவாமி ஐடியா

image

பாகிஸ்தானை மேலும் 4 துண்டுகளாக உடைப்பதே நீண்டகால தீர்வென சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து X தளத்தில், பாக்.ஐ, பலுசிஸ்தான், சிந்து, பக்துனிஸ்தான், மேற்கு பஞ்சாப் என 4 நாடுகளாக உடைக்க வேண்டும். அதில், மேற்கு பஞ்சாப் தவிர மற்ற 3-யையும் இந்தியா சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்; இந்த 4 நாடுகளுக்கும் இந்திய ராணுவம் பாதுகாப்பளிக்க தயாராக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

News April 27, 2025

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்

image

தமிழின் ட்ரெண்டிங் நடிகை கயாது லோஹர், சிம்புவின் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அசாமில் பிறந்த இவர், ’டிராகன்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார். இதற்கு முன் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருப்பது அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 27, 2025

IPL: MI அபார வெற்றி

image

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் LSG அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது MI அணி. முதலில் பேட்டிங் செய்த MI அணியின் ரிக்கல்டன், சூர்யகுமார் அதிரடியாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த LSG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

News April 27, 2025

சிகரெட்டை விட முடியாமல் தவிக்குறீங்களா?

image

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்பவர்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க ★நிகோடின் சாக்லெட்/Chewing gum போன்றவற்றை முயற்சிக்கலாம் ★டென்ஷன் காரணமாக புகைப்பிடிப்பவர் என்றால், அதற்கு பதிலாக யோகா, தியானம், மூச்சு பயிற்சி செய்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள் ★ஒரு சிகரெட் பிடித்தால், இன்னொரு சிகரெட் பிடிக்க தோன்றும். அதனால் சிகரெட் பிடிக்கணும் என தோணும்போதே, அந்த ஆசையை கட்டுப்படுத்துங்க.

News April 27, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 27, 2025

தங்கம் விலை மேலும் குறையுமா?

image

தங்கம் விலை கடந்த 4 நாள்களாக கிணற்றில் போட்ட கல்லைப் போல் ஏற்ற இறக்கமின்றி அசையாமல் உள்ளது. இதனால், நகை விலை குறையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை தற்போதைய சரிவுக்கு டிரம்ப் தான் காரணம், அவர் சீக்கிரமே மாற்றிப் பேசுவார். இதனால் தங்கம் விலை கிராமுக்கு ₹10,000-ஐ தாண்டும். எனவே தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!