India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறிய ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்று திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். செங்கோட்டையனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், அதிமுகவில் ராஜாவாக இருந்தவர் டிடிவி, ஓபிஎஸ் உடன் இணைந்து கூஜாவாக மாறியுள்ளார் என சாடினார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பிஹாரில் இன்னும் 6 நாள்களில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஹார் CM நிதிஷ்குமார் வாக்கு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிஹாரி என அழைப்பது அவமதிப்பாக இருந்த நிலையில், தற்போது பெருமையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சொந்த குடும்பத்திற்காக தான் எதுவும் செய்ததில்லை என கூறிய அவர், ஒட்டுமொத்த பிஹாரும் தன் குடும்பம் தான் என்று தெரிவித்துள்ளார்.

1956-ம் ஆண்டின் இதே நாளில் தான் (நவ.1), திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதி, தமிழ்நாட்டுடன் இணைந்தது. விளவங்கோடு, தேவிக்குளம் உள்ளிட்ட பகுதிகள் கேரளாவோடு இணைந்திருந்தன. அங்கு தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளானதை எதிர்த்து, மார்ஷல் நேசமணி கடும் போராட்டங்களை நடத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால், கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. SHARE

கூட்டணி தொடர்பாக எந்த கட்சியோடும் அவசரப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என TVK முக்கிய நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. TTV தினகரனுடன், அருண்ராஜ் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. இதனால், அவரை அழைத்து பேசிய விஜய், கூட்டணி என்பது தனிநபர் முடிவெடுக்கும் விவகாரம் அல்ல; கட்சி தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையன் நீக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, அதி தீவிரமான, அற்புதமான ராஜதந்திர நடவடிக்கைகளால், கரையான் புற்றை அரிப்பது போல, அதிமுகவை EPS அரித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். EPS பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், EPS-ன் நடவடிக்கைகளால் திமுகவின் பலம் தான் அதிகமாகிறது என்றும் தெரிவித்தார்.

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.
Sorry, no posts matched your criteria.