news

News April 3, 2025

பிரபல நடிகர் வான் டாம் மீது பாலியல் குற்றச்சாட்டு

image

கடத்தி வரப்பட்ட 5 பெண்களுடன் உடலுறவு வைத்ததாக ஹாலிவுட் நடிகர் வான்டம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோரல் பொலியா தலைமையிலான கிரிமினல் நெட்வொர்க்கிடம் இருந்து 5 ருமேனிய பெண்களை அவர் பரிசாக பெற்றதாகவும், அவர்களுடன் உறவு கொண்டதாகவும் ருமேனிய அதிகாரிகள் சார்பில் அந்நாட்டு DIICOT அமைப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புகார் மீது விசாரணை நடத்தப்படுகிறது.

News April 3, 2025

வின் டீசல் தெரியும்; காஸ்ட்லி டீசல் தெரியுமா?

image

அரசியலில் மீம்ஸ் விமர்சனம் தான் லேட்டஸ்ட் டிரெண்ட். நேற்று கர்நாடகா பாஜக X-ல் பதிவிட்ட மீம்ஸ்தான் தற்போதைய வைரல். ஹாலிவுட் நடிகர் வின் டீசல் படத்துடன், அம்மாநில CM சித்தராமையா போட்டோவை இணைத்து, ‘இவர் வின் டீசல், அவர் காஸ்ட்லி டீசல்’ என்று பதிவிட்டுள்ளது. ஏற்கெனவே காங்., அரசை 60% கமிஷன் அரசு என பாஜக விமர்சிக்கும் நிலையில், நேற்று டீசல் விலையை ₹2 உயர்த்தியதால், சித்தா மீது இந்த மீம்ஸ் தாக்குதலாம்.

News April 3, 2025

இந்திய நிலங்களை மீட்க வேண்டும்: ராகுல் காந்தி

image

சீனாவிடம் இருந்து இந்திய நிலங்களை மீட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் பேசிய அவர், இந்திய– சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சீன அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்திய வெளியுறவுச் செயலாளர், கேக் வெட்டினார் என குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிய திமுக MP டி.ஆர்.பாலு, அதை மீட்கக் கோரி TN சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

News April 3, 2025

ஏப்ரலில் 9 நாள்கள் விடுமுறை!

image

ஒவ்வொரு மாதமும் தொடங்கும்போது, எவ்வளவு நாள் லீவ் கிடைக்கும் என்றுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில், ஏப்ரல் மாதம் 9 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது. ஏப்.10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்.14 தமிழ் வருட பிறப்பு, ஏப்.18 புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 12, 26ஆம் தேதி 2வது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார விடுமுறையாகும். இதில் ஏப்.12, 13, 14 என 3 நாள் தொடர் விடுமுறை வருகிறது.

News April 3, 2025

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு!

image

மே.வங்கத்தில், 25,000 பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மம்தா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்ஜெய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. மேலும், நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனத்தை 3 மாதங்களுக்குள் புதிதாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

News April 3, 2025

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளர் காலமானார்

image

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான வேணுகோபால பணிக்கர்(79) காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர், அண்ணாமலை பல்கலையில் பயின்றவர். ஜெர்மனியில் நடந்த முதல் சர்வதேச திராவிட மாநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நாவலான ‘கூனந்தோப்பு’ கேந்திர சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளது.

News April 3, 2025

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – நள்ளிரவிலேயே ஒப்புதல்

image

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். வக்ஃபு மசோதா நிறைவேறிய பிறகு, இத்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, 40 நிமிடத்திற்குள் ஒப்புதலும் பெறப்பட்டது. விரிவான விவாதம் நடத்தப்படக் கூடாது என்பதற்காகவே நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

News April 3, 2025

வக்பு வாரிய மசோதா: ராஜ்யசபாவில் தாக்கல்

image

வக்பு வாரிய திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடங்கியபோது எதிர்க்கட்சித் தலைவரான கார்கேவுக்கும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. கர்நாடக வக்பு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அனுராக் தாக்கூர் எழுப்பிய குற்றச்சாட்டை பாஜக நிரூபிக்க வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்க வேண்டும் என கார்கே ஆவேசமாக பேசினார்.

News April 3, 2025

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

image

17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

News April 3, 2025

‘எம்புரான்’ திரைப்படத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு!

image

‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு எதிரான இந்த திரைப்படத்தை இங்கு திரையிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என விமர்சித்துள்ளார். அதே நேரம் வக்பு வாரிய மசோதாவை பாமக ஆதரிக்கவில்லை என்றும், இஸ்லாமியர்களின் சொத்துகளை அவர்களே நிர்வகிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!