News April 3, 2025

இந்திய நிலங்களை மீட்க வேண்டும்: ராகுல் காந்தி

image

சீனாவிடம் இருந்து இந்திய நிலங்களை மீட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் பேசிய அவர், இந்திய– சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சீன அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்திய வெளியுறவுச் செயலாளர், கேக் வெட்டினார் என குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிய திமுக MP டி.ஆர்.பாலு, அதை மீட்கக் கோரி TN சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

Similar News

News February 10, 2026

சற்றுநேரத்தில் ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு

image

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியுள்ள நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வந்தவுடன் படக்குழு அடுத்தகட்ட அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 10, 2026

திமுகவிலும் விஜய் ரசிகர்கள்: ஒப்புக்கொண்ட அப்பாவு

image

வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள், கணிசமாக விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, விஜய் ஒரு நடிகர்; அவருக்கான ரசிகர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக என அனைத்து கட்சிகளிலும் இருப்பார்கள் என அப்பாவு தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதால், மு.க.ஸ்டாலினை மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.

News February 10, 2026

திமுக மன்னிப்பு கேட்குமா?

image

திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு செல்லும் என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜகவின் வினோஜ் பி செல்வம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்நோக்கம் இருப்பதாக தவறான குற்றச்சாட்டை பரப்பி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த திமுக மன்னிப்பு கேட்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!