News April 3, 2025
வக்பு வாரிய மசோதா: ராஜ்யசபாவில் தாக்கல்

வக்பு வாரிய திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடங்கியபோது எதிர்க்கட்சித் தலைவரான கார்கேவுக்கும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. கர்நாடக வக்பு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அனுராக் தாக்கூர் எழுப்பிய குற்றச்சாட்டை பாஜக நிரூபிக்க வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்க வேண்டும் என கார்கே ஆவேசமாக பேசினார்.
Similar News
News January 22, 2026
ஆஸ்கர் விருதுகள்: இறுதிப் பட்டியல் வெளியானது

ஆஸ்கர் விருதுகள் பைனல்ஸுக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ‘Home Bound’ தேர்வாகாதது ஏமாற்றமளித்துள்ளது. சீக்ரெட் ஏஜென்ட்(பிரேசில்), இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடன்ட்(பிரான்ஸ்), சென்டிமென்டல் வேல்யூ(நார்வே), சிராட்(ஸ்பெயின்), தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்(டுனீசியா) ஆகிய படங்கள் ரேஸில் உள்ளன. மேலே போட்டோக்களை ஸ்வைப் செய்து பட்டியலை பாருங்கள்.
News January 22, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு அப்டேட்

<<18909138>>ஜன நாயகன் மேல்முறையீட்டு<<>> வழக்கில் 2 நாள்களுக்குள் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என தவெக வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால், இவ்வழக்கு மெட்ராஸ் HC உத்தரவு பிறப்பிப்பதற்காக இதுவரை பட்டியலிடப்படாமல் உள்ளது. சனி, ஞாயிறை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை (ஜன.26) வருவதால் ஜன.27-ல் தீர்ப்பு வழங்கப்படலாம். அதன்பிறகே, ஜன நாயகன் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
News January 22, 2026
திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியா?

2026 சட்டமன்ற தேர்தலில் மூத்த பாஜக தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் கசிந்துள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசையும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ராம சீனிவாசனும் போட்டியிடுவதற்கு பாஜக தலைமையுடன் ஆலோசித்துள்ளனராம். ஆனால் திருப்பரங்குன்றம் MLA-ஆக ராஜன் செல்லப்பா உள்ளதால், அத்தொகுதியை பாஜகவுக்கு அதிமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


