News April 3, 2025
பிரபல நடிகர் வான் டாம் மீது பாலியல் குற்றச்சாட்டு

கடத்தி வரப்பட்ட 5 பெண்களுடன் உடலுறவு வைத்ததாக ஹாலிவுட் நடிகர் வான்டம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோரல் பொலியா தலைமையிலான கிரிமினல் நெட்வொர்க்கிடம் இருந்து 5 ருமேனிய பெண்களை அவர் பரிசாக பெற்றதாகவும், அவர்களுடன் உறவு கொண்டதாகவும் ருமேனிய அதிகாரிகள் சார்பில் அந்நாட்டு DIICOT அமைப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புகார் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
Similar News
News January 15, 2026
குளிர்காலத்தில் வரும் முக்கிய பிரச்னை.. சரி செய்ய TIPS!

குளிர்காலத்தில் எளிதில் முடி வறண்டு, முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். இதனை தடுக்க 5 வழிகளை பின்பற்றினால் போதும். ➤தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து, 3 நாளைக்கு ஒருமுறை தலைக்கு குளிக்கலாம் ➤Sulphate, Paraben free ஷாம்பு பயன்படுத்துங்கள் ➤கண்டிஷனரை பயன்படுத்துவது அவசியம் ➤முடியை பளபளப்பாக வைக்க சீரம் போடுங்கள் ➤இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியம். SHARE.
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்

சுற்றுச்சுழல் போராளி ஜி.ராஜ்குமார்(70) உடல்நலக்குறைவால் காலமானார். கேரளாவை சேர்ந்த இவர் TN-ன் கொடைக்கானல் முதல் கேரளாவின் மூணாறு வரை உள்ள காட்டுப்பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ‘Save Kurinji’ என்ற நடைபயணத்தை நடத்தினார். இதனால் மூணாறுக்கு அருகில் உள்ள 3,200 ஹெக்டேர் நிலப்பரப்பு குறிஞ்சி மலை, சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவரது சேவையை மக்கள் மறந்தாலும் மலைகளும், காடுகளும் என்றும் நினைவில் கொள்ளும்.
News January 15, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை கூறினார் ஓபிஎஸ்

கூட்டணி பற்றி கேட்டாலே தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறி வந்தார். இன்று தை முதல் நாள் என்பதால் கூட்டணி பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘தை மாதத்தில் 30 நாள்கள் உள்ளது, அதில் ஏதாவதொரு நாளில் அறிவிப்பேன்’ என மீண்டும் OPS சஸ்பென்ஸ் வைத்துள்ளார். அப்போது, ‘சீக்கிரம் முடிவை சொல்லுங்கள், தினம் தினம் செத்து பிழைக்கிறோம்’ என அங்கிருந்த ஒருவர் கூற, சிரிப்பலை எழுந்தது.


