India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

+1 பொதுத்தேர்வு முடிவு நாளை காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம். பதிவு செய்துள்ள செல்ஃபோன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சொல்ல மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது. தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

1970களில் இந்திய சாலைகளில் வலம் வந்த ‘ராஜ்டூட்’ பைக்குகள் மீண்டும் சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த பைக்கை பழைய டிசைனில் நவீன வசதிகளுடன் சந்தைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 125CC இஞ்சினுடன் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பைக் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தெலங்கானா மாநிலம் கோடங்கலில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். ஆந்திர மாநிலம் இந்துப்பூரம் தொகுதியின் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரும், நடிகருமான பாலகிருஷ்ணா தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், அமைச்சருமான ரோஜா, கணவர் செல்வமணி உடன் வந்து வாக்களித்தார்.

உலகின் சுவையான சிக்கன் உணவுகளின் பட்டியலை tasteatlas வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கொரியன் fried சிக்கன் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் உணவுகள் 3 இடங்களை பிடித்துள்ளன. அதன்படி, பட்டர் சிக்கன் 2ஆவது இடத்தையும், சிக்கன் டிக்கா 3ஆவது இடத்தையும், சிக்கன் 65 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பெருவின் ரோஸ்ட் சிக்கன் 4ஆவது இடத்தையும், மலேசியாவின் அயம் கோரெங் 5ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடந்து அங்கிருந்த சமையல் கூடத்தில் உணவு சமைத்த அவர், அதனை பக்தர்களுக்கும் பரிமாறினார். மக்களவைத் தேர்தலையொட்டி, அவர் நூற்றுக்கணக்கான கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பிஹாருக்கு சென்ற பிரதமர், சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தெலங்கானா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் 23.10%, பீஹாரில் 22.54%, ஜம்மு & காஷ்மீரில் 14.94%, ஜார்கண்டில் 27.40%, ம.பி.யில் 32.38%, மகாராஷ்டிராவில் 17.51%, ஒடிஷாவில் 23.28%, தெலங்கானாவில் 24.31%. உ.பி.யில் 27.12% மேற்கு வங்கத்தில் 32.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்டார்’ படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு இயக்குநர் இளன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், திரையரங்குகளில் கிடைக்கும் கைத்தட்டலும், கரகோஷமும் ‘லவ் யூ’ என சொல்வதாகவே தோன்றுவதாகவும், பலரது கனவிலும் ஸ்டார் ஒளிர்வதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். படம் முடிந்தும் பலரும் எழுந்து செல்லாமல் அமர்ந்திருப்பதாகவும் அவர் நெகிழ்ந்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் சுமார் 39 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.65% அதிகமாகும். மாணவிகள் 91.52% பேரும், மாணவர்கள் 85.12% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைப் பொறுத்தமட்டில், 98.47% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், “காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கடும் பணவீக்கத்திற்கு மத்தியில் பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு லட்சம் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.