News May 13, 2024
+1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

+1 பொதுத்தேர்வு முடிவு நாளை காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம். பதிவு செய்துள்ள செல்ஃபோன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.
Similar News
News December 11, 2025
EPS-க்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி

தேர்தலுக்காக திமுக <<18435045>>லேப்டாப்<<>> வழங்குவதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, 2024-ல் தான் லேப்டாப் திட்டம் பற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக குறிப்பிட்டார். நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டு, பிறகு தான் தயாரிக்க முடியும் என்று கூறிய அவர், ஒரே நேரத்தில் 20 லட்சம் லேப்டாப் தயாரிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். சீக்கிரம் தயாரித்தால், அவசரகதி எனக்கூறியிருப்பர் எனவும் குறிப்பிட்டார்.
News December 11, 2025
மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ₹10 லட்சம்!

மெஸ்ஸியின் இந்திய வருகை ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இந்த ஆர்வத்தை அவரின் டூர் ஏற்பாட்டாளர்கள் பிசினஸாக மாற்றிவிட்டனர். வரும் 13-ம் தேதி ஹைதராபாத் செல்லவுள்ள அவருடன் 100 பேருக்கு மட்டும் போட்டோ எடுத்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போட்டோ எடுக்க ₹9.95 லட்சம் கட்ட வேண்டுமாம். இதுகுறித்த செய்தி வெளியாக, கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீங்க என்ன சொல்றீங்க?
News December 11, 2025
சென்னை சர்வதேச திரைப்பட விழா.. இன்று தொடக்கம்!

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. மொத்தம் 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்படவுள்ளன. தமிழில் 3BHK, அலங்கு, காதல் என்பது பொதுவுடைமை உள்பட 12 படங்கள் திரையிடப்படுகின்றன. ரஜினியின் 50-ம் ஆண்டு திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக ‘பாட்ஷா’ படமும் திரையிடப்படவுள்ளது.


