News May 13, 2024

கெஜ்ரிவாலை பதவிநீக்கம் செய்ய முடியாது : சுப்ரீம் கோர்ட்

image

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சொல்ல மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது. தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

Similar News

News December 6, 2025

ASHES: பகலிரவு ஆட்டத்தில் உலக சாதனை

image

AUS vs ENG இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. 2-வது டெஸ்ட்டின் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தில், இரு அணிகளும் இணைந்து 387 ரன்களை (AUS-378/6, ENG-9/1) எடுத்துள்ளன. பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, 2019-ல் AUS, PAK இணைந்து அடித்த 383/8 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், அதிக ரன்கள் அடித்த அணியாக AUS உருவெடுத்துள்ளது.

News December 5, 2025

தள்ளிப்போன ஜனநாயகன் அப்டேட்

image

டிச.27-ல் மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனிடையே, படத்தின் 2-வது பாடலுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், நேற்று AVM சரவணன் மறைவால், இந்த அப்டேட் தள்ளிப்போயுள்ளது. இதனால், அடுத்த சில நாள்களில் 2-வது பாடல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி கச்சேரிக்கு ரெடியா நண்பா, நண்பி?

News December 5, 2025

டிச.14-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

image

டிச.14-ல், திருவண்ணாமலை கலைஞர் திடலில், திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!