India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஜினியின் 171ஆவது படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தலைவர் 171 படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்கே 4 முதல் 5 மாதங்கள் தேவைப்படுகிறது. படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த கதைக்காக 1.5 வருடம் கடுமையாக உழைத்துள்ளேன். இந்தப் படம் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு கைதி 2ஆம் பாகம் தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இன்ஜினீயரிங், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை திறந்தவெளி, தொலைதூரம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வியில் அனுமதிக்க ஒழுங்குமுறை கவுன்சில், அமைப்புக்கு அனுமதியில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேபோல முனைவர், ஆராய்ச்சிப் படிப்பையும் இந்த முறையில் பெற தடை செய்துள்ளதாக UGC தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை <
வரும் மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபில் இறுதிப்போட்டியை காண வரும் பார்வையாளர்கள், தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர், அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை., அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்கவுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதலே அமலாக இருப்பதால் இந்த மாதம் 2 மாத அரியர் தொகையுடன் ஊதிய உயர்வு கிடைக்கவுள்ளது.
மோடி மீண்டும் பிரதமரானால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழர்களைத் தீவிரவாதிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் பாஜகவினர் சித்தரிப்பதாக குற்றம்சாட்டிய அவர், தமிழர்களை வெறுக்காத பிரதமர் வேண்டும் என்றால், பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிப்பது அவமானமான செயல் எனவும் அவர் விமசித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையை கடந்த இருவர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரை சிறைபிடித்த பொது மக்கள், அவரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மக்களை சமாதானம் செய்தனர்.
சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். நாங்குநேரி பிரசாரத்தில் பேசிய அவர் ஆட்சி, பதவி இருப்பதால் பாஜகவுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது என்றார். மேலும், பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் எனவும் எச்சரித்தார்.
அமெரிக்காவில் பயோமெட்ரிக் வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட் துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொலராடோவை சேர்ந்த பயோஃபயர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த துப்பாக்கி முக அங்கீகாரம் மற்றும் கைரேகை தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட நபர் மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக, குழந்தைகள் துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இதனை உருவாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின், சில நிமிடங்களிலேயே ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரே பெயர் கொண்ட இரண்டு வேட்பாளர்கள் சுயேச்சையாக களம் இறங்குவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து அளிக்கப்படும் ஒரு ரூபாய் வரிப் பகிர்வில், மத்திய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது. இதனை குறிப்பிடும் விதமாக ‘29 பைசா மோடி’ என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மத்திய அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாகவும், பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அதிகளவு வரிப் பகிர்வு அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.