News May 2, 2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கார் விபத்தில் பலி

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த முருகன், காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது, கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும் மோதியது. இதில், முருகன், மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மகள் நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 10, 2025
வீடுகளின் விலை கணிசமாக உயரும்

இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 6% உயரும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும். நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை – செப்டம்பரில் 9% குறைந்துள்ளது. மேலும், RBI, இதற்கு மேல் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
News December 10, 2025
ஒரு கோடி பிஹாரிகள் TN-ல் வாக்களிப்பதா? தயாநிதி

SIR-ன் போது ECI கேட்கும் ஆவணங்களில், 13-வது ஆவணமாக, பிஹார் வாக்காளர் திருத்த பட்டியல் உள்ளதாக தயாநிதி மாறன் MP தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், எந்த மாநில தேர்தலிலும் வாக்களிக்கலாம் என உள்ளதாகவும், இதன் மூலம் அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு கோடி பேர் TN-ல் வாக்களிக்கலாம் என அச்சம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், ECI-ன் உள்நோக்கம் புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்..

தமிழகத்தில் இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இன்று தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST


