News May 2, 2024
ஐபிஎல் சூதாட்டம்: காவலர் பணியிடை நீக்கம்

ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தொடா்பில் இருந்த போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் ஐபிஎல் சூதாட்டம் நடத்தியதாக கடந்த ஏப்.28ஆம் தேதி, தீரஜ், கஜேஷ், சந்தீப், ராஜேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், சூதாட்ட கும்பலுடன் காவலர் காமேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவர, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Similar News
News December 13, 2025
டிசம்பர் மாத சலுகை.. அதிரடி விலை குறைப்பு

கார் நிறுவனங்கள் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளன. ஜிஎஸ்டி குறைப்புக்கு பின் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன், பண்டிகை கால சலுகை மற்றும் ஆண்டு இறுதிச் சலுகை என சேர்ந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
கேரள அரசியலின் திருப்புமுனை: PM மோடி

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் LDF கூட்டணியை விட NDA, காங்., அங்கம் வகிக்கும் UDF கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் BJP-NDA பெற்ற வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை தங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
News December 13, 2025
சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்

மலையாள இளம் நடிகர் அகில் விஸ்வநாத் (30), மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்தவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 2019-ம் ஆண்டு ‘Chola’ படத்திற்காக கேரள அரசின் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


