News May 2, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 133
▶குறள்: ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
▶பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வது தான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும், அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
Similar News
News December 17, 2025
காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை: தமிழிசை

OPS – TTV இணைப்பை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் சிலர் திட்டமிட்டு அரசியல் செய்வதாகவும் சாடினார். மேலும், மகாத்மா காந்தி கொலையில் RSS-க்கு தொடர்பு இல்லை என்பதை கோர்ட்டே கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். MGNREGA திட்டம் VB-G RAM G என பெயர் மாற்றும் மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
News December 17, 2025
அரையாண்டு தேர்வு விடுமுறை குறைப்பா? CLARITY

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
News December 17, 2025
பக்கா பிளான்.. திமுகவின் அடுத்த டார்கெட்

கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், டிச.29-ல் திருப்பூர் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். கடந்த வாரம் வட தமிழகத்தை குறிவைத்து இளைஞர் அணி மாநாட்டை திமுக நடத்தியிருந்தது.


