Virudunagar

News November 17, 2024

விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டம்

image

விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15 ஆவது மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் மகாலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News November 17, 2024

விருதுநகர் கல்லூரியில் மியாவாக்கி காடு

image

விருதுநகர் செந்தில் குமரன் நாடார் கல்லூரி வளாகத்தில் மியாவாக்கி காடு உருவாக்கும் பணியை என்.எஸ்.எஸ், எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி, விருதுநகர் வனக்கோட்டம், சாத்தூர் வனச்சரகத்துடன் இணைந்து கல்லூரி செயலாளர் மகேஷ் பாபு துவக்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் சாரதி, திட்ட அதிகாரி அர்ஜுன்குமார் மற்றும் மாணவர்கள் பலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

News November 17, 2024

வாக்காளர் முகாமில் திருத்தம் மேற்கொள்ள 2ம் நாள்

image

தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

News November 16, 2024

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா மறைவு

image

ராஜபாளையம் அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் கங்கையா. இவர் 2017 இல் ஒரு கிடாயின் கருணை மனு,சத்தியசோதனை படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமரிசன ரீதியாக கவனம் பெற்றது. இந்த நிலையில், கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News November 16, 2024

எஸ்.பி. அறிக்கை சமர்பிக்க எஸ்.சி ஆணையம் உத்தரவு

image

கூமாபட்டியை சேர்ந்த முத்துக்குமாரை செப்.30 அன்று வெட்டிக் கொலை செய்தனர். இதில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அக்.1 அன்று நடைபெற்ற கலவரத்தில் 250 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி த.வி.இ.தலைவர் கருப்பையா தேசிய எஸ்.சி ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்ற தேசிஎஸ்.சி ஆணையம் விருதுநகர் மாவட்ட எஸ்.பி.விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

News November 16, 2024

 பூம்பிடாகையில் புகையிலை பறிமுதல்

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சரகம் அ.முக்குளம் அருகேயுள்ள பூம்பிடாகை பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன் என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 9 புகையிலை பாக்கெட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அ.முக்குளம் போலீசார் பூம்பிடாகையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News November 16, 2024

விருதுநகரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

விருதுநகரில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் பழைய பேருந்து நிலைய பகுதி, மேலரத வீதி, பாத்திமா நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, அல்லம்பட்டி, லட்சுமி நகர், எம் ஜி ஆர் நகர், அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, சிவகாசியில் ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீ மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை.
*பகிரவும்*

News November 15, 2024

முதல்வருக்கு நன்றி தெரிவித்த பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரை நீரில் சந்தித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

News November 15, 2024

சிறு தானிய உணவு தயாரிக்கும் பயிற்சி

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், தனியார் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து சிறு தானிய உணவு தயாரிக்கும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் ஒரு மாதம் இந்த பயிற்சி நடைபெறுகிறது. அதன்படி நரிக்குடியில் இன்றைய உணவாக கீரை பூரி உள்ளிட்ட பல்வேறு சிறு தானிய உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

News November 15, 2024

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,வழக்கு விசாரணையை டிச.13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!