India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

சிவகாசி தாலுகா சித்தமநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (70). இவர் தனது கணவர் உடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக ராஜபாளையத்திற்கு பஸ்சில் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. பயணம் செய்த இடத்தில் தேடியும் நகை கிடைக்கவில்லை. இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

விருதுநகர் மாவட்டத்தில் நாளை வள்ளலார் தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒருநாள் தற்காலிகமாக மூடப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

காரியாபட்டி – நரிக்குடி சாலையில் முடுக்கன்குளம் அருகே எம்.இலுப்பைகுளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பால் வண்டி மோதியதில் சாலை இலுப்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான 4 பசுக்கள், 1காளை, 1கிடாரி ஆகியவை உயிரிழந்தன. மேலும் 4 காளை மாடுகள் , 1பசு காயமடைந்தன.இச்சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <

ஸ்ரீவி.நகர் காவல் நிலைய எஸ்.ஐ மாணிக்கம் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், சிறுவனை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜன.30) மாவட்ட அளவிலான ஓய்வூதிய தாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் ஏழு மனுக்கள் தரப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.