India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசியில் பிரசித்திபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் கிரகதுரை (63) என்பவர் நிர்வாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் ரூ.30 ஆயிரத்தை அலுவலக அறைக்குள் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறை கதவு திறக்கப்பட்டு உள்ள இருந்த ரூ.30000 பணம் திருடப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தைப்பூசம், பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலைப்பாதையில் இரட்டைலிங்கம் அருகே சென்ற போது தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் இனியன்(4), மேல்மருத்தூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரை குரங்கு காலில் கடித்தது. இதே போல் மேலும் 2 பேர் குரங்கு தாக்கியதில் லேசான காயமடைந்தனர்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <

தமிழக அரசு பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.

விருதுநகர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த காளியப்பன் (23) 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிவகாசி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமண செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சாத்துார் அருகே வல்லம்பட்டியை சேர்ந்த வடிவேல் (46) என்பவரின் மகன் பாலகுரு (21) B.A (தமிழ்) டிகிரி முடித்த இவருக்கு வேலை கிடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த பாலகுரு விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.