India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (35). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராமரை அவரது மனைவியுடன் சேர்ந்து வாழும் படி அவரது தம்பி சபரிராஜன் தகராறு செய்துள்ளார். அபோது ஆத்திரமடைந்த ராமர் கட்டையால் சபரி ராஜனை தாக்கியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

விருதுநகர் மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விருதுநகர் மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் நேரு குடியிருப்பைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கிறிஸ்டிஷோபனா இவா் வீட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டில் சமையல் செய்த போது, இவரது சேலையில் தீப்பற்றியது. தீ உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தாா். இவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவி.,அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து, சுப்புராஜூவை கைது செய்தனர்.

தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

ராஜபாளையம் அருகே ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார்(42). இவருக்கும், இவருடைய அக்காள் குருபாக்கியம்(47) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருபாக்கியம் வீட்டிற்குள் நுழைந்த விஜயகுமார் அவரை தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரை தடுக்க வந்த அவருடைய அக்கா மகள் ஆனந்தியையும் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக 234 வேட்பாளர்களையும் திருச்சி மாநாடு 2026-ல் சீமான் அறிவித்து வருகிறார்.
1.ராஜபாளையம் – கார்த்திக்
2.ஸ்ரீ வில்லிபுத்தூர் – கரிகால பாண்டியன்
3.சாத்தூர் – ஆனந்தராஜா
4.சிவகாசி – டயானா
5.விருதுநகர் – லட்சுமணன்
6.அருப்புக்கோட்டை – மணிமாறன்
7.திருச்சுழி – கார்த்திக் ராஜா

விருதுநகர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.