Virudunagar

News January 18, 2025

வினாடி – வினா போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு

image

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் ஜன.25 அன்று “இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான மாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

News January 18, 2025

ராஜபாளையம் இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

image

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் விழா திடல் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் கருப்பசாமி என்பவர் அடித்து கொல்லப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மங்காபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், செந்தில்குமார்(24), லோகேஷ்(22), ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

News January 18, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகரில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 11.00 ம‌ணி‌க்கு தொடங்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அ‌ளி‌க்கலா‌ம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News January 18, 2025

விருதுநகர் அருகே முதியவரின் எலும்புக்கூடு மீட்பு

image

விருதுநகர் அருகே இ சொக்கலிங்கபுரத்தில் நேற்று மதியம் அங்குள்ள கருவேலம் காட்டுப்பகுதியில் எலும்புக் கூடு கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் வச்சகாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் துறையினர் விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ராமன் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

News January 18, 2025

பக்கத்து வீட்டில் நகை திருடி பைக் வாங்கிய வாலிபர்

image

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் புரட்டாசி 3வது சனிக்கிழமை அன்று கோயிலுக்கு சென்று விட்டு 11 பவுன் எடை கொண்ட தங்க நகையை பீரோவில் வைத்துள்ளார்.பின் பொங்கலுக்கு பார்த்தபோது நகை காணவில்லை.போலீசில் புகார் செய்ததில் நகையை அடகு வைத்து விலை உயர்ந்த பைக் வாங்கியுள்ளார் பக்கத்து வீட்டை சேர்ந்த காளிராஜ். இதற்க்கு அவர் தாய் பத்மாவதி, சித்தி ஆனந்தவள்ளி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

News January 17, 2025

விருதுநகர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

image

மம்சாபுரம் வாலாங்குளம் கண்வாய் பகுதியில் சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ்(22) என்பவரை சோதனை செய்தபோது, கைப்பையில் கொய்யாப்பழங்கள் மற்றும் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. விசாரணையில் காட்டுப் பன்றிகளைவேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்தது தெரிந்தது. இதை அடுத்து பொன்ராஜ் போலீசார் கைது செய்தனர்.

News January 17, 2025

மர்மமான முறையில் ஓட்டுநர் உயிரிழப்பு

image

சிவகாசி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 42. ஓட்டுநர் வேலை பார்த்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முத்துக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

News January 17, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

image

தமிழ் வளர்ச்சிதுறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுபோட்டி நடைபெறும். 2024-25 ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஜன.21, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஜன.22 அன்று விருதுநகர் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், முதல்வர் ஒப்புதலுடன் விண்ணப்பங்களை tamilvalar.vnr@tn.gov.in மின்னஞ்சலுக்கு ஜன.20 க்குள் அனுப்ப வேண்டும்.

News January 16, 2025

விருதுநகர் காளைக்கு சிறந்த காளைக்கான பரிசு

image

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர் சேலத்தினை சேர்ந்த பாகுபலி காளைக்கு வழங்கப்பட்டது.
2ம் பரிசான பைக் எரசக்கநாயக்கனூரை சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. 3ம் பரிசாக விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் காளைக்கு சிறந்த காளைக்கான எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது.

News January 16, 2025

வேளாண் கண்காட்சியில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 22.01.2025 முதல் 01.02.2025 வரை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடைபெற உள்ளது. இதில் வேளாண் தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இதில் அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!