Virudunagar

News September 20, 2025

அருப்புக்கோட்டை பெண்களுக்கு ரூ.9.24 கோடி கடனுதவி

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 191 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 1304 மகளிர்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.

News September 20, 2025

விருதுநகரில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. விருதுநகர் நகர் பகுதி, பெரியவள்ளிகுளம், ஜி.என்.பட்டி, துலுக்கப்பட்டி, சிவகாசி, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது. மின்தடை இடங்களை விரிவாக காண <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 19, 2025

விருதுநகர் மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 19, 2025

விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

விருதுநகர்: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY NOW

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை. இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 19, 2025

விருதுநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை? CLICK செய்யுங்க

image

விருதுநகர் துணைமின் நிலையத்தில் நாளை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நகர், பழைய பஸ் நிலைய பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை. இதேபோல, பெரியவள்ளிகுளம் துணைமின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நாளை விருதுநகர் மாவட்டத்தில் எங்கெல்லாம் மின்தடை என <>இங்கு கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 18, 2025

விருதுநகர்: தலைமறைவாக இருந்த உதவியாளர் கைது

image

விருதுநகர் டாஸ்மாக் மதுபான குடோனில் உதவியாளராக பணிபுரிந்த பிரேம்குமார் ரூ.150 லஞ்சம் கேட்டதாக 2008-ம் ஆண்டு இவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானார். இவருக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுரையில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News September 18, 2025

விருதுநகர்: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க..

image

விருதுநகர் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 18, 2025

விருதுநகர்: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளைக்குள் (செப். 19) சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!