India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 தேர்வுகள் துவங்க உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 222 அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 22,176 மாணவ மாணவியர் இத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்களுக்காக 98 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேர்வு எழுத உள்ள 137 மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறியதாக வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வேளாண் உதவி அலுவலர், நீர்வளத்துறை உதவி பொறியாளரின் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வருவாய் துறையினர் 5 பேரில் தாசில்தார் ராமநாதன் தவிர மற்ற 4 பேரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு 17ஏ பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில் சிவகாசியில் உள்ள தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மையங்களையும் தூய்மைப்படுத்தி மேசை மற்றும் இருக்கைகளை வரிசைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேசைகளில் தேர்வு வரிசை எண் எழுதும் பணியிலும் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றவர்களை கொண்டு தொடர்ந்து கண்காணித்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுஹாதா ரஹிமா அறிவுறுத்தியுள்ளார். மேலும் குவாரி குத்தகைதாரர் அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை யாருக்கும் உள்குத்தகைக்கு விட்டுள்ளார்களா என்பதையும் கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவு.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மேம்பாலம் பணிக்காக மணல் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து 3 டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண் அள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மாா்ச்.1 முதல் மார்ச்.3 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை விருதுநகர், மதுரை,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகா், மத்திய சேனையைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளிகளான வெள்ளையன், மகேஸ்வரி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இதில் பிரவீன்(5) நேற்று மாலை விளையாட சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தேடிய போது, மற்றொரு வீட்டு தகரக் கொட்டகையின் மேலே செல்லும் மின் கம்பியில் இறந்த நிலையில் கிடந்தாா். இதையடுத்து, ஆமத்தூா் போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்
அனைத்து வாகனங்களுக்கும் வாகன விபரங்களுடன் வாகன உரிமையாளர்களின் கைபேசி எண்ணை வாகன பதிவு சான்றுடன் இணைப்பது போக்குவரத்து துறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை அணுகி ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண் விபரத்தினை கொடுத்து இணைத்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சீமான் வீட்டில் நடந்த காவல் துறையின் அராஜகம் வன்மையாக கண்டிக்கதக்கது என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை எதிர்க்கும் எல்லா இயக்கங்களையும் ஒடுக்க இல்லாமல் அழிக்க தொடர்ந்து திமுக முயல்கிறது. அதற்கு காவல்துறை ஏவல் துறையாகிறது எனவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்தான போக்கு எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.