India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க அரசு பள்ளியை சேர்ந்த 17 & 14 வயது இரு மாணவிகள் தேர்வாகினர். இவர்களை ஆசிரியர் ராஜாமணி(50) காரில் அழைத்து சென்றார். இதில் 17 வயது மாணவியிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். பின், 14 வயது மாணவி ஆசிரியருடன் ஈரோட்டிற்கு செல்வதை அறிந்த 17 வயது மாணவி தலையாசிரிடம் தகவல் தெரிவித்தார்; விருதுநகர் மகளிர் போலீசார் ஆசிரியரை போக்சோவில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(25.12.2024) மாலை 04:30 மணியளவில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிகழ்வில் ஆட்சியர் ஜெயசீலன், மேயர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஸ்ரீவி ஆட்டுப்பண்ணையை சேர்ந்தவர் சூர்யா.இவரை மம்சாபுரத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் காயமடைந்தார். இதனையடுத்து ஸ்ரீவி., அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்றபோது,அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன.இது குறித்து வழக்குபதிந்து விசாரித்து வந்த நிலையில் சூர்யா, தவசியம்மாள்,ஜெயக்குமார், முனியசாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விருதுநகரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இன்று நூலகத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர திரு உருவ சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திருக்குறள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தார். பின்னர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வெம்பக்கோட்டையில் 46.20 மிமீ மழையும், சிவகாசியில் 39 மிமீ மழையும், ராஜபாளையத்தில் 25 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மொத்தம் 144 மிமீ மழை பதிவான நிலையில், சராசரி அளவாக 12.03 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி, வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகத்தின் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டாப்பிங் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீவி.எம்.எல்.ஏ.மான்ராஜ் ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளார்.

காரியாபட்டி அருகே கல்குளத்தை சேர்ந்த நாகலட்சுமி(25) சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதில், தேனி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவி., முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருந்த நிலையில், நாகலட்சுமியின் சகோதரர் கருப்பசாமி(35) ஆட்டோவில் அரிவாளுடன் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மருத்துவக் கழிவுகள் உட்பட வேறு அபாயகரமான கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கோ அல்லது வேறு வழியில் அப்புறப்படுத்துவதற்கோ துணை புரிவோருக்கும் மருத்துவக் கல்லூரிகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நேற்று(டிச.20) காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் 40 மாணவ மாணவியர்களுடன் காப்பி வித் கலெக்டர் என்ற 138வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு உயர்கல்வி வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

காரியாபட்டி தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் இன்று சோலார் நிறுவனத்தினர் நெடுஞ்சாலை துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மின் கம்பம் அமைத்து மின் இணைப்பு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சவர்ணம் என்ற பெண் செல்போன் டவரில் ஏறி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காவல் துறையினர் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.