Virudunagar

News April 7, 2024

தந்தைக்கு அஞ்சலி கூட செலுத்தவில்லை: விஜய பிரபாகரன்

image

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று விருதுநகர் அதிமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எனது தந்தை விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் 100வது நாள் நிறைவடைந்த நிலையிலும், அவரது சமாதிக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் உங்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக உருக்கமாக தெரிவித்தார். என் தந்தையை போல் மக்கள் சேவை ஆற்றுவேன் எனவும் உறுதியளித்தார்.

News April 7, 2024

வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

image

விருதுநகர், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (07.04.2024) வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், வாக்குசாவடி அலுவலர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து விளங்கினார்.

News April 7, 2024

ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

image

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் இன்று வாக்கு‌ சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.‌ இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் தலைமை வகித்தார்.‌ இதில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஜெயசீலன் விளக்கினர்.

News April 7, 2024

விருதுநகரில் நகை பணம் திருட்டு

image

விருதுநகர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரும் இவருடைய மனைவியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு கிருஷ்ணன் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மாலை திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் 9, 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் வட்டார அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உள்ள வீரர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

99 வயதுடைய முதியோரை கௌரவித்த ஆட்சியர்

image

விருதுநகர், சாத்தூர் பெரியார் நகரில் வசிக்கும் 99 வயதுடைய மூத்த வாக்காளர் ராமசாமிதேவர் என்பவர் மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு, தபால் வாக்குச்சீட்டு மூலம் வீட்டில் இருந்தபடியே தவறாமல் ஜனநாயக கடமையாற்றியதை பாராட்டி, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இன்று (06.4.2024) அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

News April 6, 2024

சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு

image

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் அம்மாவாசை முன்னிட்டு இன்று ஏப்ரல் 6 முதல் 9ஆம் தேதி வரை வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதையடுத்து இன்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதலே திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் மலைக் கோயிலில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News April 6, 2024

விருதுநகர்:பதற்றமான வாக்குச்சாவடி வெளியீடு

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 314 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி கூட மிகவும் பதற்றமானது இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

விருதுநகரில் துணை ராணுவப்படை அணிவகுப்பு

image

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1680 வாக்குச்சாவடிகளில் 186 வாக்குச்சாவடிகள் பிரச்சனைகளுக்கு உரியவை, 2 வாக்குச்சாவடிகள் பதற்றம் ஆனவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.