Virudunagar

News September 6, 2024

விருதுநகரில் மது விற்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

image

விருதுநகர் அருகே பெரிய வள்ளிகுளம் பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் போலியான ஸ்டிக்கர் ஒட்டிய வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் 10 நாட்கள் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இதில், முன்னாள் ராணுவ வீரரான வீரராஜ்(56) வீட்டில் இருந்த 264 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 5, 2024

விருதுநகரில் மது விற்ற முன்னாள் ராணுவ வீரர்

image

விருதுநகர் அருகே பெரிய வள்ளிகுளம் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் மதுபான பாட்டில்கள் வைக்கபட்டிருந்த கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி.சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் ராணுவ வீரரான வீரராஜை (56) சாத்தூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 5, 2024

இந்திய தொல்லியல் துறை இயக்குனருக்கு அமைச்சர் வாழ்த்து

image

“தமிழ் நாகரிகத்தின் தொட்டியான கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் சிறப்புற செயல்பட்ட தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தொல்லியல் துறையில் பல சாதனைகளை புரிந்திட மனமார்ந்த வாழ்த்துகள்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News September 5, 2024

தனது ஆசிரியரை நினைவு கூர்ந்து வாழ்த்திய ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தனது ஆரம்ப கால கல்வியை துவக்கிய, தமக்கு பிடித்த, தனது கல்வி மேம்பாட்டிற்கு துணையாக இருந்த ஆசிரியையை பாராட்டி அவருடன் எடுத்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “சிறந்த ஆசிரியர் என்று கேள்விக்கு நிறைய பதில் இருக்கலாம் ஆனால் ‘கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரே’ சிறந்த ஆசிரியர் என்பேன் நான்.‌ எங்கள் ஜூலியா மிஸ் சிறந்த ஆசிரியர்!” என பதிவிட்டுள்ளார்.

News September 5, 2024

விருதுநகர் அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

விருதுநகர் அருகே நரிக்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜெயபுஷ்பம். இவர், இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரருக்கு பில் பாஸ் செய்ய ரூ.3,000 லஞ்சம் வாங்கியுள்ளார். இதையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

News September 5, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையில் உள்ள தமிழத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

மாநில அளவிலான போட்டிக்கு 250 பேர் தேர்வு

image

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நேற்று(செப்.4) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 360 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 4 வயது முதல் 18 வயது வரையிலான பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய 250 மாணவ மாணவியர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

News September 5, 2024

அரசு சிமென்ட் ஆலையை புனரமைக்க கோரிக்கை

image

ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை கடந்த 10 ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் ஆலை முறையாக செயல்படாமல் மூடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சிமெண்ட் ஆலையை நவீன முறையில் புனரமைத்து மீண்டும் லாபகரமான முறையில் ஆலை செயல்பட தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

News September 5, 2024

சப் கலெக்டரிடம் பாஜகவினர் கோரிக்கை

image

சிவகாசியில் நேற்று சார் ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரனிடம் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மாநகரில் அடிப்படை வசதிகள், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு, உடனடியாக நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கு வழங்க வேண்டும், பாம்பு கடிக்கு ஊசி மருந்துகள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News September 4, 2024

புத்தக கண்காட்சியில் தொல்லியல் கண்காட்சி

image

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 27 ஆம் தேதி புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் ரொம்ப கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறையில் தெரிவித்துள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள அரியவகை பொருட்களான தங்க ஆபரணம், செப்பு காசுகள், சூது பவள மணிகள் என சுமார் 9600 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

error: Content is protected !!