India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. செப்., 20க்குள் புகார் மனுக்கள் வந்து சேர வேண்டும். தபால் சம்மந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., ஆகிய போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரி, சேப்பாக்கம் மாநில கல்லூரியில் நடைபெற உள்ளது.எனவே பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தோர் www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்வு பெற்ற மற்றும் தேர்வு பெறாத மாணவர்களை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியியல் சேர்ப்பதற்கான மற்றும் கல்விக் கடன் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 10 தேதி நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு தாலுகா, கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.தங்கபாண்டியன். இவர் இந்திய இராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில, கடந்த வாரம் பணியின்போது ஏற்ப்பட்ட விபத்தில் வீரமரணமடைந்தார். அவரது பூத உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேற்று இரவு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு கடிதம் மூலம் புகார் மனு வந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மம்சாபுரம் அருகே நரையன்குளம் பகுதியில் உள்ள காட்டில் மான் கொம்புகளை பறிமுதல் செய்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் இலவச களிமண் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விதிகளை மீறி இலவசமாக வண்டல் மண் எடுத்ததாக 3 வழக்குகள் மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே முறைகேடு இன்றி இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் அடுத்த R.R.நகரில் 26 வது ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு மத நல்லிணக்கத்தை எடுத்து வைக்கும் வகையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் இலவச களிமண் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விதிகளை மீறி இலவசமாக வண்டல் மண் எடுத்ததாக 3 வழக்குகள் மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே முறைகேடு இன்றி இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் ஒரு ஏ.டி.எஸ்.பி, 12 டிஎஸ்பிக்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில், தேவேந்திர குல வேளாளர் இளைஞரணி சார்பில், இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு ரத்ததானம் நடைபெற்றது.நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், வழக்கறிஞர் பாலச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.