India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஒரே அலுவலகத்தில் மகன் மென்பொருள் பொறியாளர், தந்தை தச்சர், வறுமை மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள தலைமுறை இடைவெளிகளை கல்வி எவ்வாறு இணைக்கிறது என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது” என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தனது X தளத்தில் தந்தை மகன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படத்தை பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று(செப்.9) நடைபெற்றது. இதில் காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களின் மின்னணு குடும்ப அட்டைகளில்பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் 1330 குறட்பாக்களை மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறனுடைய பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளது எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அக்-25ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மேய்ச்சல் நிலப்பரப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை மனித உடல் வடிவமைப்பில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மூட்டையை பார்த்த காவல்துறையினர் மனித உடலை யாரோ சாக்கில் கட்டி வீசியிருக்கலாம் என சந்தேகப்பட்டு அதனை அவிழ்த்து பார்த்த போது கன்றுகுட்டியின் உடல் சாக்கு முட்டையில் இருப்பது தெரிய வந்தது.
விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள் எதிர் கொள்ளும் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006, பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 ஆகிய சட்டங்களை மையக்கருத்தாக கொண்டு விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து அனுப்புவதற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ம் தேதிக்குள் குறும்படம் தயாரித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(80). இவருக்கும் இவரது மகன் கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது திருச்சுழி போலீசார் நேற்று செப்டம்பர் 13 வழக்கு பதிந்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 1700க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று (செப்.13) மீன் முதுகெலும்பில் செய்யப்பட்ட நட்சத்திர வடிவ ஆபரணம் மற்றும் சிறிய வடிவிலான உருளை வடிவ குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கலைநயத்துடன் வடிவமைத்திருப்பது இதன் மூலம் தெரிய வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடையில் கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர். மேலும் சிறப்பாக அத்தப்பூ கோலமிட்டிருந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கல்லூரி சேர்மன் ராஜூ கலந்து கொண்டார். செயலாளர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் உஷாதேவி தலைமை வகித்தனர்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிவகாசியில் இன்று (செப்.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொழிலதிபர் ஒருவர் ஒன்றிய நிதியமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் பதிலளித்தது குறித்து பேசிய அவர், ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம் என்றும், மன்னிப்பு கேட்க வைத்து நாடாளுமன்றத்தில் குரம் எழுப்புவோம் என்றும் பேசினார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது ரவீந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரிய இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு ஆணை பிறப்பித்து உயர்நீதிமன்றம் இன்று (செப்.13) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.