India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.பின்னர் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
சாத்தூர் அருகே சத்யா காலனி பகுதி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(23). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது,புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் மந்திரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகாசியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஒரு நுங்கின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் நுங்கு வாங்கி உண்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (62).நேற்று சீனிவாசன் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் பைக்கில் திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பங்கஜம் பெட்ரோல் பங்க் அருகே பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று மகிழ் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய விழாவினை விருதுநகர் கலெக்டர் வீ.ப.ஜெயசீலன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் மகிழ் 24 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
விருதுநகர், காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் பகுதியில் கோடை வெயிலை தவிர்க்க நண்பர்கள் சார்பாக சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நீர், மோர் பந்தலினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் இன்று திறந்து வைத்து. பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி தண்ணீர் வழங்கினார்கள்.
அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெயக்குமாருக்கும் தம்மாந்தெருவை சேர்ந்த அம்பரேஷ் (27) என்பவருக்கும் இடையே பார்சல் டெலிவரி செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.டவுன் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் பாண்டி (33). இந்நிலையில் பாண்டி தொட்டியாங்குளம் கிராமத்தில் நாடகம் பார்க்கச் சென்றதாகவும், அப்போது நாடக மேடை அருகே வைத்து தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து பாண்டியை கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாண்டி புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. வரும் மே 1 முதல் மே 11 வரை ஓவியம், கலை, போஸ்டர் தயாரித்தல், இணைய வழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன. எனவே பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.