Virudunagar

News January 20, 2026

இருக்கன்குடியில் தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியீடு

image

இருக்கன்குடி நீர்தேக்கத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், மேலகரந்தை பகுதி விவசாயிகளுக்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் நாளை(ஜன.21) முதல் ஜன.26 வரை 7 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் 30.24 மில்லி கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் 1,274,07 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

News January 20, 2026

விருதுநகர்: அ.தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

image

அ.தி.மு.க., மாநில மாணவர் அணி துணை செயலாளராக நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மச்ச மணிகண்டன் கடந்த ஒரு சில மாதங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஓரிரு மாதத்திலேயே அவரது பதவியை பறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று முதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

News January 20, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

விருதுநகர்: LOAN வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கி/பிற நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும். <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

விருதுநகர்: தமிழ் தெரிந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 19, 2026

விருதுநகர்: இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

image

விருதுநகர் மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..

News January 19, 2026

சிவகாசி அருகே மணல் கடத்திய இருவர் கைது

image

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த வெள்ளூரை சேர்ந்த கணேசமூர்த்தி(44), குருமூர்த்தி(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் அள்ளும் வாகனத்தின் டிரைவர் சுருளி தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கிராவல் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன், லாரியை பறிமுதல் செய்தனர்.

News January 19, 2026

விருதுநகர்: காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

image

தமிழகம் முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் நியமித்துள்ளார். அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கிருஷ்ண மூர்த்தியும், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக ராஜ்மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டாக மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி, கிழக்கு மாவட்ட தலைவராக ராஜா சொக்கர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

News January 19, 2026

விருதுநகர்: வீடு கட்ட ரூ.2.50 வரை மானியம்

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

சிவகாசி: அரிவாளால் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

image

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மம்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் பேருந்தை மறித்து ஓட்டுநர் பார்த்திபனிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ஓட்டுநர் அளித்த புகாரில் முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!