India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஸ்ரீ கொத்தமங்கலம் கிராமத்தில் நேற்று (மே.25) கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரும்பு நடவு பயிற்சி, கரும்பு விரிவாக்க மேலாக அவிநாசிலிங்கம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு பட்ட கரும்பு நடுவதின் முக்கியத்துவம் பற்றியும், நவீன கரும்பு நடவு முறை பற்றியும் ஒற்றுமை பாசன அமைப்பின் பயன்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
2024-25ஆம் ஆண்டிற்கான முதுநிலை, PHD மற்றும் முனைவர் ஆராய்ச்சி 2 (National Overseas Scholarship Scheme (NOS)) தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணாக்கர்கள் கீழ்க்காணும் இணைய வழியில் https://overseas.tribal.gov.in/ விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கத்தில் திண்டிவனம் நகரத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிக்கும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மே 27ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதில் மு.சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனி தலைமையில் ஆட்சியர்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள மஞ்சுனேஷ்வர அய்யனாரப்பன் கோயிலைச் சுற்றியுள்ள காட்டினை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டிவனம் பகுதியில் 6 செ.மீ, அரசூரில் 3 செ.மீட்டரும், முகையூர், மணம்பூண்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், விழுப்புரம், scs மில் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோட்டக்குப்பம் போலீஸ் எஸ்ஐ திவாகர் ஈ.சி.ஆர் சாலை பொம்மையார்பாளையத்தில் நேற்று போலீசாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் (50), போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரமேஷ் மரக்கட்டையை எடுத்து எஸ்ஐ திவாகரை தாக்க முயன்றார். இதையடுத்து போலீசார் ரமேஷை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மயிலம் ஒன்றியம், வெங்கந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு திருமகள் மலர்மகள் சமேத அருள்மிகு ஶ்ரீ சீனுவாசப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று (மே 23) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர் L.P.நெடுஞ்செழியன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.