Villupuram

News June 2, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

image

13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஊடக மைய அறை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் உடனிருந்தனர்.

News June 1, 2024

மரக்காணம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மரக்காணம் அடுத்த கீழ்பேட்டை பகுதியில் இன்று புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்தும், கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த கார் ஓட்டுநர் குறித்து அடையாளம் தெரியாததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 1, 2024

விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சி.பழனி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டது.

News June 1, 2024

குரூப் 2 தேர்வில் சாதித்த விழுப்புரம் மாணவி

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மே 31) பணி நியமன ஆணை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றிவரும் நாகப்பன் என்பவரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரியால் நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News June 1, 2024

விழுப்புரம்: பாராட்டு விழாவில் அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பழனி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று (மே 31) நடைபெற்றது, விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு வாழ்த்தினார். உடன் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 31, 2024

நிலை தடுமாறிய அரசு பேருந்து விபத்து

image

திண்டிவனம் அடுத்த பேரணி கிராமத்தில் இன்று அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. பெரியதச்சூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பத்தாம் நம்பர் கொண்ட அரசு பேருந்து, பேரணி அரசு டாஸ்மாக் அருகே சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள வயலில் பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

News May 31, 2024

அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்

image

இன்று (மே 31) பிறந்தநாள் காணும் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் செஞ்சியில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் மாவட்டச் செயலாளர்கள் மலைச்சாமி, பொன்னிவளவன், தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News May 31, 2024

விக்கிரவாண்டி அருகே 3 கார்கள் மோதி விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நேற்று(மே 30) வேகமாக வந்த கார், சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதியது. இதை தொடர்ந்து பின்னால் வந்த 2 கார்களும் மோதி சாலையின் குறுக்கே நின்றது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 30, 2024

6 மாத வழக்கு பதிவு வெளியிட்ட மாவட்ட காவல்துறை

image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் மொத்தமாக மதுவிலக்கு வழக்கில் 8220 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் , 46 இருசக்கர வாகனங்கள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரி மாணவர்களிடையே 275 விழிப்புணர் முகாம்கள் நடத்தப்பட்டது எனவும் தனது அறிக்கையில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!