Villupuram

News February 2, 2026

திண்டிவனத்தில் அதிரடி கைது!

image

விழுப்புரம்: திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், சங்கர், முருகன், பன்னீர்செல்வம், வாசுதேவன், செல்வராஜ், பாஸ்கரன் ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

News February 2, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் த.தமிழ்வாணன் (40), தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைப் பாா்த்து வந்தாா். அய்யூர், அகரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புக் கட்டையில் மோதியதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 2, 2026

விழுப்புரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கடலூரைச் சேர்ந்தவர் ஜெசிப்பிரியா(22). இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(25) என்பவருக்கும் கல்லூரியில் காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.1) மாலை, ஜெசிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 1, 2026

விழுப்புரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 944930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

விழுப்புரம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04146-259216) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

News February 1, 2026

திருவெண்ணெய்நல்லூர் மேற்கூரையில் இடிந்து இருவர் காயம்

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் கலைச்செல்வி, மனைவி தீபா இவர்கள் இருவரும் பள்ளியில் சமையலராக வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11:30 மணியளில் சமையலறை கட்டிடத்தின் மேற்கூரையில் எதிர்பாராதவிதமாக சிமெண்டு காரைகள் பெயர்ந்து கலைச்செல்வி, தீபா ஆகியோர் மீது விழுந்தது. இதில், 2 பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
<

News February 1, 2026

விழுப்புரம்: வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

விழுப்புரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 1, 2026

விழுப்புரம்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் 132-வது பிறந்தநாள் விழா!

image

திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில், செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மணிமண்டபத்தில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் 132-வது பிறந்த நாள் கொண்டப்பட்டது. பி.ராமசாமி ரெட்டியார் உருவச் சிலைக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (பிப்.01) மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

News February 1, 2026

விழுப்புரம்: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.

1.<> இங்கு க்ளிக்<<>> செய்யுங்க

2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க

3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!