India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (நவ.4) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 332 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 4) நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த 10 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ஈம சடங்கிற்கான உதவித்தொகை தலா 17,000 வீதம் 1,70,000 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் 2024 ‘லீக்’ கூடைப்பந்து போட்டி வேலூர் பெரியார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 14 மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இப்போட்டிகள் நடைபெறும்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த பொதுமக்கள் 4 நாட்கள் விடுமுறை முடிந்து நிலையில் நேற்று மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இதனால் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேலூர் வட்டார போக்குவரத்து கமிஷனர் பட்டாபசாமி மேற்பார்வையில் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இதில் 959 ஆம்னி பஸ்கள் சோதனை செய்து. அவற்றில் விதி மீறிய 101 பஸ்களுக்கு ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.03) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டிருந்தன. இதில், 2 பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல் மேலேயுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் மற்றும் தகவலுக்கு மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் 27 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று (நவம்பர் 3) நடந்தது. இந்த போட்டியை விஐடி துணை தலைவரும், வேலூர் மாவட்ட கைப்பந்து அமைப்பின் பெருந்தலைவருமான ஜ.வி.செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் 27 மாவட்டங்களை சேர்ந்த 582 பேர் பங்கேற்றதாக தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பைக் திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் நேற்று (நவ.2) ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவாகியுள்ளது. வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் 1 வழக்கும், அணைக்கட்டு 1, சத்துவாச்சாரி 1, குடியாத்தம் டவுன் 15, கே வி குப்பம் 4, மேல்பாடி 1, என மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் திருட்டுகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 21 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த 28ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் 9 பேர் நேற்று வேலூர் சிறைக்கு திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள 12 கைதிகள் இன்றும், நாளை மாலைக்குள் சிறைக்கு திரும்ப உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக வேலூர் மண்டலத்தில் 148 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், வேலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன. 3 நாட்கள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு பஸ்களில் 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.