Vellore

News March 17, 2026

‘அரசியல்வாதிக்கு ஓய்வு வயது அவசியம்’ -வேலூரில் அதிரடி!

image

ராஜஸ்தானிலிருந்து நடைபயணமாக வேலூர் வந்த ஜெயின் துறவி கமல்முனி கமலேஷ், தேர்தல் செலவுகளைக் குறைக்க ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தினார். மேலும், அரசு ஊழியர்களைப் போல் அரசியல்வாதிகளுக்கும் ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மக்கள் நலனுக்காகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் பேசினார். வேலூர் ஜெயின் சங்கத்தினர் உடனிருந்தனர்.

News March 17, 2026

வேலூரில் பகீர்: கத்திமுனையில் வாலிபர்!

image

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தைச் சேர்ந்த அருண்சாய்(30), கடந்த 13ம் தேதி இரவு நண்பருடன் வேலூர்-தெள்ளூர் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், செல்போன் & ரூ.600 பறித்துச் சென்றனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

News March 17, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 17, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

வேலூர்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) வேலூர் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

வேலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

வேலூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் -தேர்வு கிடையாது!

image

வேலூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச்.23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 16, 2026

வேலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து!

image

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாலுகாக்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

News March 16, 2026

வேலூர் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு எண் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் 24X7 தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்களை கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில் தகவல்களும், Whatsapp எண்ணின் வாயிலாக புகைப்பட/காணொளி ஆதாரங்களுடன் தெரியப்படுத்தலாம். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!