India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.U.சிவராமன் உத்தரவின் பேரில் இன்று வேலூர் சட்டமன்றத் தொகுதியில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் B.S.தனுஷ்குமார் தலைமையில், காவல்துறையினர் மற்றும் மத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி வேலூர் யுகல் கிஷோர்பண்ட், அணைக்கட்டு சந்தீப்குமார், காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஸ்ரீமன் சுக்லா, குடியாத்தம் மிர்தாரிக் அலி ஆகியோர் பொது பார்வையாளர்களாகவும், 5 தொகுதிக்கும் கவுஸ்தூப்ஷர்மா காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் ஒரு சமயம், மொழி, சாதியினர் இடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் அல்லது பதற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. பிற அரசியல் கட்சியினரின் சொந்த வாழ்க்கை குறித்து குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். வாக்கு பெறுவதற்காக சாதி, இன, மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது. என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

வேலூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

சட்டமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்தப்படவுள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் அல்லது 0416-2977432 என்ற தொலைபேசி எண் மூலமாக தெரிவிக்குமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

காட்பாடி கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (33). டிராவல்ஸ் ஏஜென்சி வைத்துள்ளார். இவர் தனது மனைவியுடன் நேற்றிரவு வேலூருக்கு காரில் வந்துள்ளார். வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே தமீம் அன்சாரி காரை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு காரில் இருந்து இருவரும் இறங்கி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி (CRMI) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், பயிற்சி இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். மேலும்,மாணவர்களின் இடர்பாடுகளைத் தீர்க்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
Sorry, no posts matched your criteria.