India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 4-ம் தேதி மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது 74017 03483 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ வரும் 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை இணைந்து 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 20 மலை கிராமங்களில் மக்களுக்கு இன்று (டிசம்பர் 28) முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். அதேசமயம் சிறுத்தையை பிடிக்க கேமரா, டிராப் கேமரா வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசியில் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்துதல் அமைப்புகள் 135 எண்கள் மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு பாகாயம் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் எதிரில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல்வல்லம் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டின் மேல் பகுதியில் சில்வர் கைப்பிடி பொறுத்தும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த முகேஷ் (26), சதீஷ் (24) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (டிசம்பர் 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காஜி பணியிடத்திற்கு இஸ்லாமியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க தகுதியுடைய இஸ்லாமிய நபர்கள் வேலூர் கலெக்டர் என முகவரியில் வரும் 10ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் அல்லது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏ-பிளாக், முதல் மாடியில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அளிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டின் 2024 கடைசி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று (டிசம்பர் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளிமலை அடுத்த மேல்பாடி காவல் நிலையம் பின்புறம் மிகவும் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த பழைமையான கல்வெட்டுகளை நேற்று விழுப்புரம் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அதில் கல்வெட்டுகள் 940-ம் ஆண்டு ராஜராஜ சோழனுக்கு முன்னரே 1-வது சோழன் பராந்தக சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது என அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 26.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது, காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 26) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.