India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கதிர்ஆனந்த் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து இன்று சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 6) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அதில், “190 லிட்டர் கள்ளச்சாராயம், 50 மதுபாட்டில்கள், 55 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று (ஜுன் 6) வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 94.3°F பதிவானது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா நங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி அரிகிருஷ்ணன் (43). இவர் நேற்று மாலை (ஜூன் 5) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 5) வேலூரில் அதிகபட்சமாக 40.10 மிமீ மழை பதிவானது. மோர்தனா 34.20 மிமீ மழையும், பேர்ணாம்பட்டு 2.60 மிமீ, கே.வி. குப்பம் 3 மிமீ, காட்பாடி 15.20 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 140.80 மிமீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 2,75,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (ஜூன் 5) வேலூரில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் ஜானகி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
வேலூரில் உள்ள பெரியார் பூங்காவை தனியார் நிறுவனம் பராமரித்து வந்தது. பின்னர் பல காரணங்களால் தனியார் நிறுவனம் பூங்கா பராமரிப்பு பணியை சில ஆண்டு நிறுத்தியது. இதனால் பூங்காவை மாநகராட்சி, மத்திய தொல்லியல் துறையிடம் நேற்று (ஜூன் 5) ஒப்படைத்தது. இன்னும் 2 மாதத்திற்குள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் இன்று (ஜூன் 5) அளித்த பேட்டியில் தமிழ்நாடு பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம்தான் என்பது நிரூபணமாகியுள்ளது. ஒரு பந்தயத்தில் ஓடுகின்ற ஆறு குதிரையில் எந்த குதிரை வெற்றி பெறும், எந்த குதிரை நொண்டியடிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அதேபோல, தமிழ்நாடு பாஜக என்ற குதிரை ஏற்கனவே கவிழ்ந்துவிட்டது என்றார்.
வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பண்முகக் கடினமாதல், நடுக்கு வாதம், இரத்த அழிவுச்சோகை, இரத்த உறையாமை உட்பட 21 வகையான மாற்றுதிறனாளி மாணவ/ மாணவியர் விருப்பபாட பிரிவில் 5 விழுக்காடு ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று ஜூன் 5 வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Sorry, no posts matched your criteria.