Vellore

News January 11, 2026

வேலூர்: வருமான வரித்துறையில் வேலை.. அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 11, 2026

வேலூர்: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

வேலூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம்.<> DigiLocker,<<>> M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

வேலூரில் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

வேலூர்: HI சொன்னா- வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News January 11, 2026

வேலூர் மக்களுக்கு ஆட்சியர் விழிப்புணர்வு

image

வேலூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் சுப்புலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். அதில், போகி பண்டிகையின் போது பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், டியூப், காகிதம் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

News January 11, 2026

காட்பாடிக்கு புதிய டிஎஸ்பி நியமனம்!

image

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த டிஎஸ்பிக்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடியில் டிஎஸ்பியாக பணியாற்றிய பழனி, ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு டிஎஸ்பியாகபணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடலூர் சேத்தியாத்தோப்பில் பணியாற்றிய விஜயகுமார் காட்பாடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

News January 11, 2026

வேலூரில் ‘வெற்றி நமதே’ வழிகாட்டும் நிகழ்ச்சி

image

வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று ‘வெற்றி நமதே’ வழிகாட்டும் நிகழ்ச்சி அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்கு தயாராகும் முறை மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

News January 11, 2026

வேலூர்: புதிய TRACTOR வாங்க 80% மானியம்!

image

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு வழங்க பரிந்துரைகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ள தலைமையாசிரியர்கள் சார்பான 01.01.2021 முதல் 31.12.2025 வரையிலான மந்தண அறிக்கைகளை தவறாமல் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

வேலூரில் 224 பேர் ஆப்சென்ட்!

image

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், கல்வி உதவித் தொகை வழங்கவும், திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 356 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 23 மையங்களில் நடந்த தேர்வை மொத்தம் 5 ஆயிரத்து 132 பேர் எழுதினர். 224 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!